Friday, July 26, 2019

வாய்ப் புற்றுநோயாளர் எண்ணிக்கை 40% ஆக அதிகரிப்பு

கடந்த 05 ஆண்டுகளின் தரவுகளின் படி நாட்டில் வாய்ப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக, தேசிய புற்றுநோய்  தடுப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இவ்வகையான புற்றுநோய் வயதானவர்களிடையே அதிகளவில் காணப்பட்டாலும், அண்மைக்காலமாக இளைய தலைமுறையினர் மத்தியிலும் அதிகளவில் பரவி வருவதாக, விசேட வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஆண்களிடையே பெரும்பாலும் காணப்படும் நோயாக வாய்ப் புற்றுநோய் அமைந்துள்ளது. வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் 02 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர். இவ்வகை புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லுதல், புகைப்பிடித்தல் மது அருந்துதல் ஆகியன காணப்படுகின்றன. .
பிற காரணிகளாக  ஊட்டசத்துக் குறைபாடு, வாய்வழி ஆரோக்கியமின்மை உள்ளிட்டவை அடங்குகின்றன.  
நாளொன்றுக்கு 03 தடவைகளுக்கு அதிகமாக வெற்றிலை, பாக்கு மெல்வோரை வாய்ப் புற்றுநோய் அதிகளவில் தாக்குகின்றது.
30 வயதிற்கு மேற்பட்ட, தொடர்ச்சியான பழக்கமாக புகைப்பிடித்தல் மற்றும் வாரம் ஒரு முறை மதுபானம் அருந்துதல் மற்றும் நாளொன்றுக்கு ஒரு பைக்கற்று பாக்கு மெல்லுகின்றவர்களும் இதில் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Author: verified_user

0 comments: