Monday, June 10, 2019

கன்னியா வெந்நீரூற்று, முல்லைத்தீவு நீராவியடி ஆலயங்கள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளது - அமைச்சர் மனோ


திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரையை நிர்மாணிக்காதிருக்க, கன்னியா விகாரையின் பௌத்த பிக்குகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பாக இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், அமைச்சர் மனோ கணேசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், வேலுகுமார், சுசந்த புஞ்சிநிலமே, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன், திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார, கன்னியா விநாயகர் ஆலயம் சார்பாக கணேஷ் கோகிலரமணி, கன்னியா விகாரை பிக்குகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் மனோகணேசன் கலந்துரையாடல்களை நடத்தி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Author: verified_user

0 comments: