Thursday, June 6, 2019

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள விசேட குறிப்பாணை


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என கோரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு விஷேட குறிப்பாணையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

இந்த குறிப்பாணையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட சுதந்திர கட்சியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான தரப்பினருடன் முற்போக்கு கூட்டணி ஒன்றை ஸ்தாபித்து அதற்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறும் அந்த குறிப்பாணையில் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: