Thursday, June 27, 2019

சகல மத்ரஸாக்களிலும், பாடசாலைக் கல்வி கட்டாயம் - வருகிறது புதிய சட்டம்

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களிலும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.  அரபுக் கல்லூரிகளில் தொழில் நுட்ப கல்வி அறிவையும் மற்றும் உயர்  பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொள்வதற்கான திட்டங்கள் புதிய ஒழுங்குவிதி முறைகளுடன் உள்வாங்கப்பட்டு;;ள்ளன.; தீpவரவாத்தை ஊக்குவிக்கக் கூடிய செயற்பாடுகள் கொண்ட எந்த அம்சங்களும் பாடவிதானத்தில் இடம்பெறாமல் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படவுள்ளன. அந்தவகையில் யார் என்ன சொன்னாலும் எதிர் வரும் காலங்களில் வெளியாகும் மௌவிமார்கள்  அறிவுத் துறையில் ஓர் உன்னதமான வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஒருங்கே கொண்டவர்களாக உருவாகப் போகின்றார்கள் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அரபுக் கல்லூரிகள் தொடர்பாகவும்  மற்றும் ஹஜ் விவகாரம் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் சட்ட மூலத்தை உருவாக்கி அமைச்சரவையின் அங்கீகாhரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதிய தீர்மானங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை, மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அமைச்சின்  அலுவலகத்தில் முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சது எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

அரபுக் கல்லுர்pகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து செற்படுவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் என்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த மே மாதம் இடம்பெற்றது. இதன் போது சகல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அரபுக் கல்லூரிகளை கல்வி  அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும் அதேவேளை இந்த வேலைத் திட்டத்தை முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுப்பதற்கு  எல்லா முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் ஏகமானதாக இணக்கம் தெரிவித்துள்ளார்கள். 

அரபுக் கல்லூரிகள்  கல்விக்  அமைச்சசுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான நிலைப்பாட்டுக்கு அப்பால் எமது மாணவர்களை மார்க்க ரீதியாக சரியான வழிநடத்தலுடைய நெறிப்படுத்துவதற்கான வழிவகைகளை  செய்து கொடுக்க வேண்டியது  எமது கட்டாயக் கடப்பாடாக மாறியிருக்கிறது.  இந்நாட்களில் இந்த விடயம் தொடர்பாக  எதிர்கொண்ட நிலைமைகளை ஓரளவு  விரைந்து உள்வாங்கிப் புரிந்து கொண்டு  சரியான வகையில் -  வழியில் அது நிரந்தரமானதாகவும் ஆக்கபூவர்மானதாகவும் எமது எதிர்கால  உலமாக்களின் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

அது மட்டுமல்ல .நாங்கள் இனி வரும் காலங்களில்  கருத்தொருமைப்பாட்டையும், பொதுப்போக்கையும் மிகவும் பலமாக பின்னபற்ற வேண்டியவர்களாகவுள்ளோம். எனவே இந்நாட்டினுடைய இன்றைய  சூழல் அனைத்து முஸ்லிம்களும் இணங்கி ஒற்றுமையுடன் பயணிக்கும் போக்குக்கு செயலூக்கம் கொடுத்து இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை ;அவர்கள்  உருவாக்கியுள்ளார்கள். இது நல்ல விசயமாகும். . நாங்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவாறே முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் இருப்பையும், எமது புனித மார்க்கத்தையும் நிலை நிறுத்த நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம் என்பதை எதிர்காலத்தில் வரலாறு கூறும்.

முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் அரபுக் கல்லூரி விடயம் தொடர்பில் பள்ளிவாசல்களுக்கான வக்பு சபை இருப்பது போன்று அதற்கான  தனியானதொரு சபை இருக்கும்  .கல்வி அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் இருப்பார்கள். மூன்று அல்லது நான்கு முஸ்லிம் அல்லாதவர்களும் ஏழு  அல்லது எட்டு முஸ்லிம் பிரதிநிதிகள். இடம்பெறுவர். 

எவ்வாறாயினும் பாட விதானம் தொடர்பாக தீர்மானங்கள் யாவும் மார்;க்க அறிஞர்களின் வழிகாட்டலின்படியே எடுக்கப்படும். இந்த சட்ட மூலத்தின் மூலம் எல்லா அரபு மத்ரஸாக்களிலும் கட்டாயமாக பாடசாலைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அதேவேளையில் விசேடமாக இந்த அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அதிக வாய்ப்புகள் ; கிட்டும்  எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் நீண்ட காலமாக தயாரித்து வந்த பொதுக் கல்விப் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். என். வி. கிவ், தொழில் நுட்பக் கல்வி, கைத்தொழில் பயிற்சி என தொழில் பயிற்சிக் கல்வி முறையும் போதிப்பதற்கான சலுகைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

விசேடமாக பொதுவான கல்விக் கொள்கை இருந்த போதிலும்  தப்லீக் மத்ரஸா, தவ்ஹீத் மத்ரஸா, சுன்னத்துல் ஜமாத் போன்ற அரபுக் கல்லூரிகளில் மேலதிமாக பாடங்களைப் போதிப்பதற்கு தடைகள் இல்லை. எனினும் இந்தப் பாடங்களைப் போதிப்பதற்கு கல்வி சபையின் அங்கீகாரத்தைப் பெற்றியிருக்க வேண்டும். எதிலும் தீவிராத  ஊக்குவிக்கக் கூடிய செயற்பாடுகள் கல்விப் போதனைகள் பாட விதானத்தில் அமைந்திருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான விடயமாகும். என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: