Thursday, June 6, 2019

அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதம் ஒரு நாடகமாகும்......!


முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் குறித்து மகாநாயக்க தேரர்கள் வௌியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

கொழும்பு - அலரிமாளிகையில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெறும் நாடகம் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டிற்குள் பௌத்த தர்மத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யட்டிநுவர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: