Thursday, June 6, 2019

வைத்தியர் சாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்களை பரிசோதனை செய்ய விசேட குழு

வைத்தியர் சாபி தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள தாய்மார்கள் தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரியின் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்தக் குழுவினால் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தாய்மார்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தினால் இந்த பரிசோதனைக் குழுவை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்.

Author: verified_user

0 comments: