Friday, June 7, 2019

402 ஏப்பிள் கைப்பேசிகளுடன் மூன்று பேர் கைது


ஏப்பிள் கைப்பேசிகள் மற்றும் மேலும் சில தொடர்பாடல் உபகரணங்களை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் நீர்க்கொழும்பு காவற்துறை விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 402 ஏப்பிள் கைப்பேசிகளும் , 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகளும் மற்றும் 60 றௌடர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் சீன நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: