Wednesday, May 15, 2019

அமித் வீரசிங்க விளக்கமறியலில்


கைது செய்யப்பட்ட மஹசோன் படையணியின் பிரதான அமித் வீரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: