Friday, May 17, 2019

ஆட்சியை விட்டு செல்லுமாறு வலியுறுத்தி கறுப்பு பட்டி அணிந்து சபைக்கு சென்ற உறுப்பினர்கள்...!


வெலிகம பிரதேச சபையின் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து இன்று சபை நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தொன்றிற்கு எதிர்ப்பினை வௌிப்படுத்துவதற்காகவும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையர்களை கைது செய்யுமாறும் வலியுறுத்தியும், மற்றும் ஆட்சியிலிருந்து அரசாங்கத்தை வௌியேறுமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வெலிகம பிரதேச சபையின் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எதிர்ப்பினை வௌிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் எதிர்ப்பினை வௌிப்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் அவர்கள் சபை வளாகத்திற்குள் பிரவேசித்திருந்தனர்.

வெலிகம பிரதேச சபையில் 25 ஆசனங்களுடன் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சிக்கு 10 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 03 ஆசனங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: