Wednesday, May 1, 2019

மைத்திரி, மகிந்த மற்றும் ரணிலிற்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு அரச புலனாய்வுச் சேவைகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் ஒன்றாக எங்கும் பயணிக்க வேண்டாம் என குறித்த மூவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் இருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகளில் இருந்தும், தேவாலயங்கள் மற்றும் ஆலயங்கள் ஏனைய மத வழிபாட்டு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தும் அரச தலைவர்களை விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் அரச தலைவர்கள் பங்கேற்பது முக்கியம் எனின் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil win 

Author: verified_user

0 comments: