Wednesday, May 22, 2019

உண்மையான குற்றவாளிகளை மறைக்கவே ரிஷாத்துக்கு எதிராக பிரேரணை

உண்மையான குற்றவாளிகளை மறைக்கவே எதிர்க்கட்சியினர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்களை தெரிவித்து எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விசாரிக்கப்படவேண்டும். அப்போதுதான் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதனை நிரூபிக்க முடியும். 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை மறைக்கவே எதிர்க்கட்சி ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருக்கின்றது. இதற்கு இடமளிக்க முடியாது. அதனால் தெரிவுக்கழுவில் இதுதொடர்பாக ஆராய்ந்து உண்மையான குற்றவாளிகளை இனங்காணவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரிப்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Author: verified_user

1 comment:

  1. சபாஸ்...உண்மயான கருத்து இவர்களை இப்படியே விட்டுவிட கூடாது உண்மையான குற்றவாளி யார் எந்த நாய் என்பதனை உலகத்துக்கு தெரியவேண்டும் இது ஒரு திட்டமிட்ட செயல் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் தெரியவைப்பான் தெரியபடுத்துவான் அனைத்து சகோதர சகோதரிகளும் இரவு பகல் பாராமல் அல்லாஹ்விடம் கையேந்துங்கள் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி நிச்சயம் அல்லாஹு அக்பர்....

    ReplyDelete