Tuesday, May 14, 2019

இலங்கை புகைத்தலில் மற்றுமொறு சாதனையை நிலைநாட்டியது

ஆசிய வலயத்தில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை குறைந்த நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளது.

பூட்டானில் புகைத்தலுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டிலும் பார்க்க இலங்கையில் புகைப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக புகையிலை மற்றும் மதுசார அதிகார சபையின் தலைவர் டாக்டர்  பாலித அபேகோன் தெரிவித்தார்.
2400 ஹெக்டயராக இருந்த புகையிலை உற்பத்தி தற்போது 2 ஆயிரம் ஹெக்டேயராக குறைவடைந்துள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த உற்பத்தி முழுமையாக குறையுமென டாக்டர் பாலித அபேகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: