Friday, May 17, 2019

"புலனாய்வு பிரிவினை பலவீனமடைய செய்தமையே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் "

ஈஸ்டர் ஞாயிறு பயங்ரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்பன மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, 2015 இல் பதவியேற்ற அரசாங்கத்தின் கவனயீனமான ஆட்சி, தூரநோக்கின்றி மேற்கொள்ளப்பட்ட படையினர் வேட்டையினால் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்தமை என்பனவே இந்த நிலைக்குக் காரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.
போர் வெற்றியின் பத்தாண்டு நிறைவை விமர்சையாகக் கொண்டாட நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்த போதிலும் ஈஸ்டர் ஞாயிறன்று அப்பாவி பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் இணைய வேண்டும் என்பதால் இந்த நிகழ்வுகளை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்தோம். 
ஈஸ்டர் ஞாயிறு பயங்ரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்பன மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Author: verified_user

0 comments: