Thursday, May 16, 2019

கிடைகப்பெற்றுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹஷ்மினின் மரபணு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைகப்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இந்த இரத்த மாதிரிகள் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் அலாவுதீன் அஹமட் முவாத் என்பவர் என மரபணு பரிசோதனையில் கண்டறிய்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் ஆச்சி மொஹமட் ஹஸ்துன் என்பவர் என மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஷங்ரிலா விருந்தகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் மற்றும் இல்ஹாம் அஹமட் இம்ராஹிம் ஆகியோரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்த உத்தரவுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் பொறுப்பில் உள்ள சஹ்ரானிஜன் மனைவி மற்றும் மகளின் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவான வடமேல் மாகாணத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 61 வீதித் தடைகள் ஸ்தாபிக்க்பட்டுள்ளன.
இதேநேரம், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் பாடசாலை மாணவர்களின் வருகையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு  ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு அதிகளவில் பதிவாகியுள்ள நிலையில், நகர பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் தொடர்ந்தும் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்திடம் எமது செய்திச் சேவை வினவியபோது, கருத்து தெரிவித்த அதன் பிரதிநிதி ஒருவர், மாணவர்களின் வரவில் முன்னேற்றம் காணப்பட்டாலும், 75 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: