Wednesday, May 1, 2019

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து சவுதி விடுத்துள்ள அறிவிப்பு


இலங்கையில் கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இங்கு தங்கியுள்ள தங்களது நாட்டு பிரஜைகளை நாடு திரும்புமாறு சவுதி அரேபிய அரசாங்கம் அறிவுறுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நேற்றையதினம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எச்சரித்திருந்தார்.

இதனை அடுத்தே சவுதி அரேபிய, இலங்கையில் உள்ள தங்களது பிரஜைகளை வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Author: verified_user

0 comments: