Wednesday, May 1, 2019

மஹ்ரிப் தொழுகையின் போது பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல்

மஹ்ரிப் தொழுகையின் போது பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல்....!

இன்று மஹ்ரிப் தொழுகையின் போது, குளியாபிட்டிய , வெவகம, ஏதன்டவேல பள்ளிவாயல் மீது ஒரு கும்பல்  தாக்குதல் நடத்தியதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.

மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

மஹ்ரிப் தொழுகையின் போது பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் சில தளபாடங்களையும் உடைத்துவிட்டு , பக்கத்தில் இருந்த சிறு ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

குளியாபிட்டிய போலீசார் தற்போது களத்துக்கு விஜயம் செய்து CCTV உதவியுடன்   விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: