Sunday, May 19, 2019

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!


எதிர்வரும் இரண்டு நாட்களில் தென் மேற்கு உள்ளிட்ட நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களில் இவ்வாறு மழைப் பெய்யக்கூடும்.

இதேவேளை , கிழக்கு மாகாணத்திலும் , பொலன்னறுவை , மன்னார் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Author: verified_user

0 comments: