Thursday, May 16, 2019

சவால் விடுத்து விண்ணப்பித்துள்ள உறுப்பினர்கள்...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடையை சவால் விடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பிரித்தானியாவில் 2001ம் ஆண்டு முதல் தடை அமுலாக்கப்பட்டுள்ளது.


எனினும் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப்பின்னர் அதன் செயற்பாடுகள் எவையும் பதிவாகாத நிலையில், தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்தது.


இந்த கோரிக்கையை இந்த ஆண்டு ஆரம்பித்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சர் நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், விடுதலைப் புலிகள் மீதான தடை தவறாக உணர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதம், பிரித்தானியாவின் 2000ம் ஆண்டுக்கான தீவிரவாத சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விசேட தீர்ப்பாயத்தின் முன்னாள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: