Wednesday, May 15, 2019

கணவன் மற்றும் மனைவியும் இணைந்து செய்துள்ள மோசடி

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.

அம்பாறை பகுதியை சேர்ந்த 5 நபர்களிடம் 32 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த குறித்த இருவரும், அம்பாறை பகுதியில் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றையும் நடத்தி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், அம்பாறை தொழிலாளர் தீர்ப்பாயத்திலும், நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்திய பின்னர் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: