Monday, May 13, 2019

இனத் துவேசர்களான நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க மீண்டும் கைது..!


ஊழல் ஒழிப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று மற்றும் நேற்று முந்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இன்று முற்பகல் முறைப்பாடொன்றை தாக்கல் செய்வதற்காக வரகாபொலை காவல் நிலையத்திற்கு வந்திருந்த போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



இதேவேளை , மஹாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.



தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: