Friday, May 3, 2019

கைது செய்யப்பட்டவரிடம் ஐ.எஸ் அமைப்பின் காணொளி - தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி...!


ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் காணொளிகள் அடங்கிய இறுவட்டுக்களை தன்வசம் வைத்திருந்தார் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தர் ஒருவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, குறித்த நபர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே அவரை விசாரணை செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் காணப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வங்கி கணக்கில் கடந்த சில மாதத்திற்கு பாரியளவிலான நிதி பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: