Tuesday, May 21, 2019

ஒரு முஸ்லிம் பொலிஸ், உத்தியோகத்தரின் அனுபவம்நான் பொலீஸ் சேவையில் இனைந்து 5 வருடங்கள் கடந்தாலும் நான் இலங்கையின் பல பாகங்ளில் பல மாற்று மத சகோதரர்ளுடன் பழகி இருக்கிறேன் அவர்களிள் பலரின் செயற்பாடுகளை இன்றும் நான் மனதில் நினைத்து சந்தோஷமடைகிறேன். நான் பொலீசில் இனைவதற்க்கு முதல் எனக்கு சக இன நண்பர்கள் அரிது.

முதலாவதாக நான் பொலீஸ் வித்தியாலயத்தில் பயிற்ச்சிக்காக சென்ற போது 196 உப பொலீஸ் பரிசோதகர்களில் நாங்கள் இருவரே முஸ்லீம் அதில் மற்றவர் மலே முஸ்லீம் இருந்தாலும் என்னுடன் எனது தாய்மொழி பேசும் 10 இந்து மத சகோதரர்களும் இருந்தனர் எனக்கு சிங்களமும் பேச தெரியாது இருந்தாலும் எங்களுடன் இருந்த சிங்கள நண்பர்கள் எங்களுக்கு சிங்களம் கற்ப்பித்தார்கள்.இந்த காலகட்டத்தில் நான் எனது கட்டிலில் தொழுதும் கொண்டேன் அப்பொழுது ஏனையவர்கள் பாடல் கேட்டு கொண்டிருந்தால் சத்தத்தையும் குறைத்து விடுவார்கள்.மரியாதையாகவும் நடந்து கொள்வார்கள் இன்றும் அவ்வாறே. 

நான் பொலீஸ் கல்லூரியில் இருந்து ஜும்மா தொழ களுத்தறைக்கு செல்வதற்க்கு ஜீப் வண்டி ஒன்றும் சாரதி ஒருவரையும் அனுப்புவார்கள்.அவர் நாங்கள் தொழுது முடிந்து வரும் வரைக்கும் பள்ளிக்கு வெளியில் காத்திருப்பார் அவருக்கு நாங்களே கடையில் சாப்பாடும் எடுத்து கொடுத்தோம் அவரும் சந்தோஷமாக எங்களுடன் வருவார் அதே போல் பயிற்ச்சியளிப்பவர்களும் அவ்வாறே வெள்ளிக்கிழமைகளில் அவர்களே நேரம் வரும் போது சில வகுப்புகள் இடம் பெற்றுக்கொன்டிருக்கும் போதும் பள்ளிக்கு செல்லவில்லையா என்பார்கள். 

ஒரு நாள் சட்ட வைத்தியம் சம்பந்தமாக சிங்கள சட்ட வைத்தியர் ஒருவரின் விசேட வகுப்பு ஒன்று இடம் பெற்றது அன்று வெள்ளிக்கிழமை அவர் வகுப்பு ஆரம்பத்தில் அறிந்து கொண்டார் நான் முஸ்லீம் என்று தொழுகை நேரம் வரும் போது சொல்லிவிட்டு தொழ போய் வாருங்கள் என்றார் அதே போன்றுதான் எங்களுடைய வகுப்புக்கள் ஆரம்பிக்கும் போதும் ஒவ்வொரு மத வழிபாட்டின் படி ஆரம்பம் செய்வார்கள் தனி ஒரு முஸ்லீமாக இருந்தும் எனக்கும் வாய்ப்பளித்தார்கள் ஜும்மா முடிந்து வந்து barrack ல் பார்க்கும் போது மேசையில் சாப்பாடு இருக்கும் அது எடுத்து வைக்கிற வேர யாரும் இல்லை நம்ம தாய் மொழி சகோதரர்கள்.

அவங்களுக்கு தெரியும் பாஹிம் தொழுது முடிஞ்சி வருவான் என்டு நானும் அவ்வாறே அவங்க கோயில் சுத்தம் செய்ய செல்வேன்.பூஜை வளிபாடுளை பார்க்க செல்வேன்.அவ்வாறு நான் அவர்களின் செயற்பாடுகளில் ஒரு துளிரும் இனவாதத்தை காணவில்லை அதே போன்றுதான் நோண்புகாளங்களிலும் நோண்பு பிடிக்க களுதறை Last chance ஹாஜியாரின் சகர் சாப்பாடு பொலீஸ் கல்லூரி Main guard room ல கடமையிலிருக்கும் சிங்கள நபரிடம் கொடுப்பாங்க அதை எடுக்க போக இல்லாட்டி யாராவது ஒருத்தர் அதை எங்கட Barrack கு கொண்டுவந்து தருவாங்க நோன்புடன் காலையில் தினமும் 10 Km Pt ம் இருக்கும் அதிலே முடிந்தவரைக்கும் செய்ய சொல்லுவாங்க நோன்பு திறக்க பள்ளிக்கு செல்ல வாகணமும்கிடைக்கும் உள்ளுக்கு வருவோம் கஞ்சிக்காக தூங்காமல் காத்துக்கொண்டிருப்பார்கள் அந்த காலப்பகுதியில் நான் அவர்களிடத்தில் இனவாதத்தை காணவில்லை நானும் அவ்வாறே நானும் போயா நாட்க்களில் பன்சலைக்கு சென்று வழிபாடுகளை பார்ப்பேன் சில் எடுக்கும் சந்தர்ப்பங்களில் தயாரித்த தேயிலையினை தமிழ் சகோதரர்களுடன் சிங்கள சகோதரர்களுக்கு பரிமாறுவேன் நமது செயற்ப்பாட்டை வைத்தே எமக்கு மரியாதை கிடைக்கிறது.

 அதே போன்றுதான் நான் எல்பிட்டிய பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போதும் அது தனி சிங்களவர்கள் வாழும் நகரம் பள்ளி இல்லை ஜும்மா தொழுவதற்க்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பென்னைக்கு அங்கு இருந்த ஒரே ஒரு முஸ்லீம் ஹோட்டல் ஆட்களோட போவம் 2 மணித்தியாலம் போகும் Oic எதுவும் பேசமாட்டான் நோண்பு காலங்களில் அங்க இருக்கிற பன்சல ஹாமதுரு யோகட் தயிர் பழங்கள் அனுப்புவாரு அவருக்கு இஸ்லாம் தொடர்பாக விளக்கம் தெரிந்தவர். அதே போன்றுதான் 2017 ம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நான் நோண்பு நோற்றது களனி மானல் வத்த பன்சலையில் அங்கு இருந்த ஹாமதுரு உதவினார் எனது சேவை அனுபவத்தில் நிறைய இவ்வாறான அனுபவங்கள் உண்டு. 

நமது மார்க்கம் அழகான பண்புகளால் வளர்ந்த ஒன்று.சிலரின் பிழையான வழிகாட்டல்களாலும் நமது கடும்போக்கு செயற்பாடுகளாலும் இவ்வாறான நல்ல மாற்று மத சகோதரர்களும் எதிர்காலத்தில் எமக்கு எதிராக செயற்ப்படலாம். பொய்யான மத நல்லினக்கத்தை விட்டுவிட்டு நமது அழகான பண்பாடுகள் மூலம் மத நல்லினங்கத்தை ஏற்ப்படுத்துவோம். அத்தோடு நம்மவர்கள் மார்க்ககத்தின் பெயரால் தினிக்கப்பட்ட இந்த அரேபிய கலாசாரம். அதிக ஆடம்பரம் என்பவற்றிலிருந்து விடுபட்டு நாட்டின் சட்ட்த்தினையும் கடைப்பிடித்தல் உதாரணம் வீதி ஒழுங்குகள் என்பவையும் முக்கியமானவையாகும்

- Abu Nithal -

Author: verified_user

0 comments: