Thursday, May 16, 2019

காணாமலாக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்: ஆதாரம் உள்ளதென்கிறார் மோகன்

காத்­தான்­கு­டியில் இருக்கும்  பிர­பல அர­சி­யல்­வா­தியின் தலை­மையில் இயங்­கிய ஆயுதக் குழு­வினால் கடந்த காலங்­களில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரில்  பலர் கொல்­லப்­பட்டு மட்­டக்­க­ளப்பில் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். குறித்த சட­லங்கள் எங்கு புதைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான சாட்­சி­யங்கள் எங்­க­ளிடம் இருக்­கின்­றது என்­பதை கிழக்கு மாகாண இரா­ணுவ கட்­டளைத் தள­ப­தி­யிடம் தெரியப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம் என மட்­டக்­க­ளப்பு தமிழ் உணர்­வா­ளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.
 தமிழ் உணர்­வா­ளர்கள் அமைப்பின்   ஊட­க­வி­ய­லாளர் மாநாடு  நேற்று நடை­பெற்­றது.  அதன்போதே  அவர் இவ்­வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்­கையில், கடந்த காலங்­களில் காணாமல் போன­வர்­களுள்  சுமார் 35 பேர்  மட்­டக்­க­ளப்பில் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். காத்­தான்­கு­டியில் இருக்­கின்ற பிர­பல அர­சி­யல்­வா­தியின் தலை­மையில் இயங்­கிய ஆயுதக் குழு­வினால் இது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.குறிப்­பி­டப்­பட்ட சட­லங்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் நகர்ப்­பு­றத்தை அண்­டிய பல பகு­தி­களில் புதைக்­கப்­பட்­டுள்­ள­தற்­கான தக­வல்கள் கிடைத்­துள்­ளன. இது தொடர்­பாக நாம் கிழக்கு மாகாண இரா­ணுவ கட்­டளைத் தள­ப­தியைச் சந்­தித்து அவ­ரிடம் அந்தச் செய்தி தொடர்பில் தெரியப்­ப­டுத்தி  இரா­ணுவத் தள­ப­திக்கு தெரியப்­ப­டுத்­து­வ­தற்­கான அறிக்கை ஒன்­றி­னையும் வழங்­கி­யி­ருக்­கின்றோம்.
குறித்த சட­லங்கள் எங்கு புதைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான சாட்­சி­யங்கள் எங்­க­ளிடம் இருக்­கின்­றது என்­பதை மிகவும் தெளிவாக அவ­ரிடம் கூறி­யி­ருக்­கின்றோம்.  இரா­ணு­வத்தின் மீது நம்­பிக்கை வைத்து நாங்கள் இந்தத் தக­வலை வழங்­கி­யி­ருக்­கின்றோம். சம்­பந்­தப்­பட்ட இடங்­களை அகழ்ந்து சட­லங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்டால் பல உண்­மைகள் வெளிவரும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மிக முக்­கி­ய­மான  பிர­ப­லங்கள் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக அன்றி பொரு­ளா­தார மற்றும் தொழில் போட்டி கார­ண­மா­கவும் காணாமல் போயி­ருக்­கின்­றனர். எனவே எங்­க­ளது சாட்­சி­யத்தைக் கொண்டு உரிய முறையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை நாங்கள் முன்­வைத்­தி­ருக்­கின்றோம்.
சாட்­சி­யங்­களின் பாது­காப்பு கார­ண­மாக குறிப்­பிட்ட இடங்கள் சாட்­சி­யங்­களின் விப­ரங்கள் தொடர்பில் தற்­போது ஊட­கங்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. ஆனால் இவ்­வி­டயம் மூடி­ம­றைக்­கப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே ஊட­கங்­க­ளுக்குத் தெரியப்­ப­டுத்­து­கின்றோம்.
தற்­போது காத்­தான்­கு­டியில் ஆயுதக் குழுக்கள் இயங்­கி­யமை தொடர்பில் ஆதாரபூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்கு முன்­னரும் பல தட­வைகள் காத்­தான்­கு­டியில் ஆயுதக் குழுக்கள், இருக்­கின்றனர். என்­பது பற்றி பலரும் தெரிவித்­தி­ருந்­தார்கள். கிழக்கு ஆளு­ந­ரிடம் ஆயு­தங்கள் இருப்­ப­தாகக் கூறி மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில்கூட ஒருவர் உண்­ணா­வி­ரதம் இருந்­தி­ருந்தார். ஆனால் இவ்­வி­ட­யங்கள் அந்­நே­ரத்தில் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை. 
பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் ஈடு­பட்ட குண்­டு­தா­ரிகள் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு ஒரு அர­சி­யல்­வா­தியின் வேண்­டு­தலின் பிர­காரம் விடு­தலை செய்­யப்­பட்­ட­தாகப் பல அமைச்­சர்கள் கூறி­யி­ருக்­கின்­றார்கள். இன்று கூட தற்­கொ­லை­தாரி இவர் தான் என அறி­யப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் தற்­போது அவர் குண்­டுடன் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் விடு­த­லை­யா­கி­யி­ருப்பார். அந்­த­ள­வுக்கு அர­சியல் பலம் இருக்­கின்­றது.
நாங்கள் முன்­னெ­டுக்கும் விட­யங்கள் அர­சாங்கத்துக்குப் பாத­க­மாக இருக்­கு­மாக இருந்தால் தற்­போதும் இந்த அவ­ச­ர­காலச் சட்டம் எங்கள் மீதும் பாயும் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இஸ்­லா­மிய அர­சி­யல்­வா­தி­களின் நட­வ­டிக்­கையும், இஸ்­லா­மியப் பிர­தே­சங்­களில் நடை­பெ­று­கின்ற அபி­வி­ருத்­தி­க­ளையும் ஒட்­டு­மொத்­த­மாகப் பார்க்­கின்ற போது இவர்­க­ளுக்கு ஏரா­ள­மான நிதிகள் வெளிநா­டு­களில் இருந்து வரு­கின்­றது. ஆனால் அதற்­கான கணக்கு வழக்­குகள் எதுவும் இல்லை. தமிழ் மக்­களில் சாதா­ரண ஒரு பய­னா­ளியைத் தெரிவு செய்­வ­தாக இருந்தால் கூட எவ்­வ­ளவு சிர­மத்தின் மத்­தியில் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றார்­கள். ஆனால் முஸ்­லிம்­க­ளுக்கு எந்தத் தக­வல்­களும் தேவை­யில்லை. ஒரு அமைச்­சரோ அல்­லது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் சிபா­ரிசில் வழங்­கப்­ப­டு­கின்­றது. 
மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் என்­பது ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. கிழக்கு எல்­லை­யாகக் கரு­தப்­படும் ஒலுவில் பிர­தே­சத்தில் ஒரு பல்­க­லைக்­க­ழகம் உள்­ளது. மேற்கு எல்­லை­யாகக் கரு­தப்­படும் புனா­ணையில் ஒரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கின்­றார்கள். தெற்குப் பகு­தி­யாகக் கருதும் புல்­லு­ம­லையில் தண்ணீர்த் தொழிற்சாலை அமைக்கின்றார்கள் என்கின்ற மூன்று விடயங்களையும் நாங்கள் முன்பு சுட்டிக்காட்டியிருந்தோம்.
முற்றுமுழுதாக அராபியக் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது முற்றுமுழுதாக தவறான விடயம். ஏனெனில் இங்கு அரபு மாணவர்கள் எவரும் வந்து கல்வி கற்கப் போவதில்லை. இந்த நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தான் கல்வி கற்கப் போகின்றார்கள். இந்த அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நுழையும்போது தாங்கள் ஒரு அராபியக் கலாசாரத்துக்குள் நுழைவது போன்ற தோற்றப்பாடு நிச்சயமாக மாணவர்கள் மனதில் பதியப்படும். இது எதிர்கால மாணவர் சமுதாயத்துக்கு சிறந்த விடயமல்ல என்றும் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: