Monday, May 13, 2019

முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் திட்டமிடப்பட்ட, இனக் கலவரங்களுக்கு பின்னால் இருப்பது யார்...?

- Fauzer Mahroof -

தற்போது இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் திட்டமிடப்பட்ட இனக் கலவரங்களுக்கு பின்னால் மகிந்த + கோத்தபாய கும்பல் உள்ளது.

ஈஸ்தர் தாக்குதலின் மூலம் உள் நாட்டில் , இலங்கையின் தேச? பாதுகாப்பை முன் நிலைப்படுத்தி அதிகாரத்திற்கு வர இக்கும்பல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை பாவிக்கிறது.

சிங்கள பௌத்த தேசத்தின் நவீன வரலாற்று துட்டகைமுனுக்களாக இவர்கள் தம்மை நிலை நிறுத்துகின்றனர். ஈஸ்தர் தாக்குதலின் உள் நாட்டு சூத்திரதாரிகளை போசித்து, நிதியளித்து, இலக்குகளை தெரிவு செய்து , இந்தக் குரூர கொலையாளிகளை தாக்குதல் நடாத்த அனுமத்தித்ததன் மூலம், பின்விளைவாக எழும் சூழலை எப்படி தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற திட்டமும் அவர்களிடம் இருந்திருக்கிறது என்பது தெளிவு.

அடங்கி இருந்த சூழலை, தமது தேர்தல் மாவட்டமான குருணாகலையில் இருந்தே நேற்றில் இருந்து இந்தக் கும்பல் தொடக்கி வைத்தது. இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் என சொன்ன போது, மகிந்த நாளை குண்டு வைக்கப் போகிறார்கள் என சிங்கள மக்களை நோக்கி சொல்லி, அவர்களை கொதி நிலைக்கு கொண்டு வந்தது இங்கு கவனிக்கத்தக்கது.அத்துடன் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ராசிக் பிரிவினருக்கு , தமது அரசாங்கமும் புலனாய்வுப் பிரிவும் பணம் கொடுத்து ஊட்டி வளர்த்த கதையும் மகிந்தவே ஏற்றுக் கொண்ட விடயமாகி விட்டது.

மகாராஜாவின் மும்மொழித் தொலைக்காட்சி ஊடகம் யாரை பதவிக்கு கொண்டு வர பிரச்சாரம் செய்கிறது... அதற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை என்ன எனத் தெரியாமல் நாம் இருப்பது அரசியல் அறிவீனம் .

என்ன நடக்கிறது? இதற்கு பின்னால் உள்ள உள்னாட்டு சக்திகள் யார்? வெளி நாட்டு சக்திகள் யார் என்பது அவர்கள் இதன் மூலம் பெறப்போகும் அரசியல் , பொருளாதார அதிகார நலன்கள் மூலமாக நமது கண்ணுக்கு முன் தெரியும் உண்மைகளாக இருக்கும்... இந்த மகிந்த - கோதா கும்பலை ஆதரிக்கும் கொஞ்சப் பேருக்கு விளங்கும் ஆனால் சுணங்கும்... அல்லது இறுதி வரை விளங்காமலே போகும்.

நீங்கள் இப்படி சொல்கிறீர்களே... அதிகாரத்தில் மைத்திரி- ரணில் போன்றவர்களின் அரசாங்கம்தானே இருக்கிறது என கேட்கலாம்.... ஆனால் இந்த அரசாங்கம் என்பது வெறும் பெயரளவானது.. இந்த இருவருமே வேலைக்காகாத சுத்த கம்மணாட்டிகள்... அரசாங்க நிர்வாகத் துறை தொடக்கம், இராணுவம் , போலிஸ் , மற்றும் ஏனைய படைத்துறை , உளவுத் துறை வரை ஆழ செல்வாக்கும் கட்டுப்பாடும் கோதாவிடமே இன்றும் இருக்கிறது.

இந்த ஈஸ்தர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் முன் கூட்டியே கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதை தடுத்தும், மறைத்ததும் யார் ? என்கிற கேள்விக்கான பதிலிலியே எல்லாம் தங்கியுள்ளது.

இன்று கோதா + மகிந்தவின் அதிகாரத்திற்கான வேள்வித் தீயில் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு பலி கொள்ளப்பட்டு வருகிறது.

Author: verified_user

0 comments: