Thursday, January 24, 2019

இலங்கை அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சி செய்தி

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை 12 வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதிலும், மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே போல் பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Author: verified_user

0 comments: