Monday, January 14, 2019

தமிழ், முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் குணசேகரன்கள் ஒழிக்கப்பட வேண்டும்

யுத்த முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டிலும் குறிப்பாக, கிழக்கு மண்ணிலும் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள நல்லுறவைச் சீர்குலைத்து கசப்புணர்வைத் தோற்றுவித்து, இனமுறுகலை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் குணசேகரன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
கிழக்கு மண் மூவின மக்களும் கலந்து வாழ்வதுடன், குறிப்பாக தமிழ், முஸ்லிம் உறவு என்பது தவிர்க்க முடியாதவொன்றாக ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையுடையது. மிகத்தொன்மையானது.

தமிழ், முஸ்லிம் உறவு வலுப்பெற்று நாம் செல்லாக்காசாகப் போய் விடுமோ என்ற அச்சத்திலும், எதிர்கால அரசியல் இருப்பு, சுகபோக வாழ்க்கை என்பவற்றை இலக்காகக் கொண்டியங்கும் ஒரு சிலரும் சிறு குழுக்களுமே இந்த இரு இனங்களையும் மோத விடும் சூழ்ச்சியை இலாவகமாக முன்னெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதை அண்மையக் காலங்களில் கிழக்கு மண்ணில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன.
பல்வேறு இழப்புக்கள், அர்ப்பணிப்பு, தியாகம், பழையனவற்றை மறத்தல் எனும் நிலையில் தமிழர்களுடன் முஸ்லிம்கள் உறவைப் புதுப்பிக்க எடுத்து வரும் முயற்சியை விரும்பாத சக்திகள் இவ்வாறு களமாடி வருவதுடன், மறைமுகத் திட்டமிடலுடன் இயங்கி வருவதை நாம் கண்ணூடே கண்டு வருகின்றோம்.
நேரடியாக களத்தில் இறங்கி சாதிக்க முடியாது. அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை இன்று அமைதியை விரும்பும் தமிழ் உறவுகளிடம் இல்லையென்பதை உணர்ந்த இவர்கள், அற்ப சொற்ப இலாபங்கள், எதிர்கால அரசியல் கனவு, குரோத உள்ளம் கொண்ட ஒரு சில சில்லறைகளை ஏவி விட்டு, பின்னாலிருந்து செயற்படுவதை நாம் சொல்லித்தான் தமிழ்ச்சமூகம் உணர வேண்டுமென்பதில்லை.

இவ்வாறாக, இனவாதச் செயற்பாடுகளுக்கு இனங்காணப்பட்டவர் தான் குணாசேகரன். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரான இவர் இனவாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகி பலி கொடுக்கப்பட்டுள்ளார்.
மூளைச்சலவை செய்யப்பட்டு, சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட இவர், கிழக்கில் குறிப்பாக, மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன் நின்று நடாத்துவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்பதை தமிழ் சமூகமும் நன்குணர்ந்துள்ளது.

வாழைச்சேனை முதல் மட்டக்களப்பு வரை இடம்பெறும் அனைத்து முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிரான இனவாத ஆர்ப்பாட்டங்களில் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தன்னை ஒரு இனப்பற்றாளனாகக் காட்டிக்கொண்டு இரு இனங்களுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அத்துடன், தமிழ் மக்களினது விடுதலைப்புலிகள் அமைப்பினது ஆதரவைப்பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளான மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மதிப்பிற்குரிய தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவையும் கடுமையாக விமர்சித்து, தமிழ் மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தையும் உண்டு பண்ணும் பணியினையும் கனகச்சிதமாக செய்து வருகிறார்.

இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டத் தேவையில்லை. அவர் யார் என்பதை தமிழ் சமூகம் நன்கறிந்துள்ளது. கடந்த காலங்கள் போன்று இவர்களை நம்பி பெறுமதியான தமது உயிர், உடமைகளை, தாம் பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்க இனி மேலும் தமிழ் சமூகம் தாயாரில்லை.
சொந்த மண்ணும் சொந்த சமூகமும் புறக்கணித்து வருவதை உணர்ந்த இவர்களே, இந்த குணசேகரனுக்கு பின்னாலிருந்து ஆட்டுவித்து வருவதுடன், இனவாதத்தையும் ஊட்டி வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஆட்டோ தரிப்பிடப் பிரச்சினையில் முக்கிய பாங்காற்றிய இவர், தசாப்தங்களாக அப்பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டி ஜீவனோபாயம் நடாத்தி வந்த முஸ்லிம் சகோதரர்களை விரட்டியடிப்பதில் முன்னிலை வகித்துச்செயற்பட்டார். அதற்காக சன்மானமாக பிரதேச சபை உறப்பினர் பதவியை அடைந்து கொண்டார்.

அத்தோடு, தனது பணியை நிறுத்திக் கொண்டாரா? இல்லை. அதன் பின்னரும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஆர்பாட்டங்கள் நடாத்தியே புழைப்பு நடாத்தும் இவர், அண்மையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மீது பழியைச்சுமத்தி செங்கலடியில் ஆர்ப்பாட்டமொன்றை தலைமையேற்று நடாத்தினார்.
அத்தோடு, மாணவி மதமாற்றம் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து முஸ்லிம் ஆசிரியர்கள் மீதும் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பலியைச்சுமத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் அதன் பின்னணியிலும் இவரின் பங்களிப்பு கனகச்சிதமாக இருந்தமை மறுப்பதற்கில்லை.

அதே ஆர்ப்பாட்டத்தில், கடந்த காலங்களில் இனவாதம் பேசியமையால் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஓரமாய் நின்று முன முனைத்து, சரிந்து போன தனது செல்வாக்கை சரி செய்ய முயற்சித்தும் தோற்றுப்போனமை வேறு விடயம். இனவாதம் பேசுவதில் தன்னை யாரும் விஞ்சி விடக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருக்கும் குணசேகரனின் செயற்பாட்டால் குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மூக்குடைந்து போனார்.
அத்தோடு, கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்தை இனவாதமாக மாற்றுவதிலும் அதற்கெதிராக ஹர்த்தால் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தீவிரமாகச் செயலாற்றிய இவர், முன் பின் தெரியாத, என்ன நடக்கிறதென்ற களநிலவரங்கள் புரியாத அப்பாவி தமிழ் மக்கள் ஒரு சிலரை ஆசை வார்த்தைகாட்டி அழைத்து வந்தது, பதாதைகளை கையில் கொடுத்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாகக்காட்ட முனைந்து மூக்குடைந்து போனதுடன், நாங்கள் எப்போது இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்ற நல்லதொரு பாடத்தை சிந்திக்கத்தெரிந்த தமிழ் சமூகம் சொல்லாமல் சொன்னதை இந்த குணசேகரன்கள் உணராமலிருக்க வாய்ப்பில்லை.

ஆயுதங்களால் சாதிக்க முடியாமல் போனதை இனவாதத்தீயை மூட்டி சாதிக்கலாம் என்று எத்தணிக்காதீர்கள். சுய புத்தியில் சிந்திக்கும் ஆற்றலில்லாத, எந்தவொரு விடயத்தையும் இனவாத, மதவாதக்கண்ணோட்டத்தில் நோக்கும் குணசேகரன்களின் அற்ப சொற்ப சுய இலாபங்களுக்கு பலிக்கடாவாகாமல் குணசேகரன்கள் போன்ற விசக்கிருமிகளை தமிழ் சமூகம் ஒழித்துக்கட்டி இனநல்லுறவு தழைத்தோங்க முயற்சிக்க வேண்டும்.
உலக வரலாற்றில் ஒரு சமூகத்தைப்பலி கொடுத்து, ஒரு சமூகத்தின் முதுகிலேறி சவாரி செய்ய முற்பட்ட குணசேகரன்களுக்கு என்ன நடந்து என்பது நமக்கு பாடங்களாகவும் படிப்பினையாகவும் ஆகின்றன.
அத்தோடு, இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் குணசேகரன்களை சந்தைப்படுத்தி இனவாதத்தை தூண்டி இலாபம் தேட முயலும் ஊடகங்களும் ஊடக தர்மத்தைப்பேணி நடப்பதுடன், தங்களின் செயற்பாட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியதும் இன நல்லுறவுக்கு வழி செய்ய வேண்டியதும் அவசியமாகின்றது.


என்றென்றும் தமிழ், முஸ்லிம் நல்லுறவு தழைத்தோங்கட்டும்.
(எம்.ஐ.லெப்பைத்தம்பி

Author: verified_user

0 comments: