Sunday, December 16, 2018

மூன்று பேர் பலி.................

கற்பிட்டி - பொல்கஹவெல மற்றும் கொகருள்ள பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில்  உந்துருளியாளர்கள் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

கற்பிடி - பாலகுடா பிரதேசத்தில் பாரவூர்த்தி ஒன்று உந்துருளியுடன் மோதுண்டதில் 40 வயதுடைய தலவில பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொல்கஹவெல - குருநாகல் வீதி மெத்தலந்த பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி மதில் ஒன்றுடன் மோதுண்டதில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே தம்புள்ளை - குருநாகல் வீதி பன்னல பிரதேசத்தில் உந்துருளி ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் 26 வயதுடைய மற்றும் ஓர் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Author: verified_user

0 comments: