Sunday, December 16, 2018

மீராவோடை உதுமான் முன்பள்ளியின் 26ஆவது மாணவர் வெளியேற்று விழா

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் மீராவோடை உதுமான் முன்பள்ளியின் 2018ஆம் ஆண்டுக்கான மாணவர் வெளியேற்று விழா 16.12.2018ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை உதுமான் முன்பள்ளியின் தலைவர் ஜனாப். பீ.எம். அஸ்வர் (ஆசிரியர்) தலைமையில் மீராவோடை அல்-ஹிதாயப மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வி்ன் பிரதம அதிதியாக எமது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) அவர்களும், கௌரவ அதிதியாக பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களும், மீராவோடைப் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மீராவோடை உதுமான் முன்பள்ளி ஆசிரியைகளான திருமதி. எம்.எச். ஆரிபா, திருமதி. எம்.எஸ்.ஜெஸீமா, திருமதி. ஈ.எல். றியாஸா, திருமதி. கைறுன்னிஸா (நிருவாகம் சார்பாக) ஆகியோரினால் பயிற்றுவிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்ட முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் அரங்கேற்றப்பட்டன.


Author: verified_user

0 comments: