Tuesday, May 29, 2018

பணிபகிஸ்கரிப்பிற்கு தயாராகும் பவுசர் வாகன உரிமையாளர்கள்

எரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

இதேவேளை , திட்டமிட்டப்படி தொடரூந்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து தொழிநுட்பவியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 4 மணி தொடக்கம் இந்த பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கப் போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.    

Author: verified_user