Tuesday, April 17, 2018

மட்டக்களப்பு, வாகனேரியில் மனதை நெகிழ வைத்த சம்பவம்

நண்பர்களுடன் பகிர
 வாகனேரியில் பெரும் துயரத்தில் வாழ்கின்ற ஒரு குடும்பத்தைப் பற்றி எனது முகநூலில் சென்ற மாதமும் இம்மாதமும் பதிவு செய்திருந்தேன்.
அந்த மனிதர் நடமாடுவதற்கான மூன்று சக்கர சைக்கிள் உடையும் தருவாயில் இருந்தது கண்டு மனம் அழுதது. ஆனாலும் அந்தக்குடும்பத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தங்களுக்கு அமைத்தது இவ்வளவுதான் என்ற திருப்தி அங்கு குடிகொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நான்கு நண்பர்கள் செய்த பண உதவியும் (ரூபாய் 8,000 - எண்ணாயிரம்) அதற்கு சித்திரைப் பெருநாளுக்கு முதல் நாள் உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கிவந்தோம். என்னுடன் இந்தப் பணியில் எனதருமை நண்பர் வாழைச்சேனை விபுலானந்த வீதியில் வாழ்கின்ற எஸ். சேகர் (SSO) அவர்களும், எம். சியாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) இணைந்து கொண்டார்கள்.
இந்த முகநூல் குறிப்பைப் படித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியநிபுணர் ஒருவர் இன்று எனது சேமிப்புக் கணக்கிற்கு ரூபாய் 50,000 (ருபாய் ஐம்பது ஆயிரம்) இனை இந்தக் குடும்பத்தினருக்காக அனுப்பி வைத்திருக்கிறார். அவர் பெயரையோ, முகவரியையோ இங்கு என்னால் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்.
இந்த உதவிக்குரிய மனிதர் உடைந்த வீட்டில் வாழ்கிறார். வீட்டின் ஒரு அறையில் அவரின் ஐந்து ஆடுகளும் அதனோடு இணைந்த அறையில் நான்கு பிள்ளைகளும், கணவன் மனைவியும் வாழ்கிறார்கள்.

இந்த வீட்டைத் திருத்திக்கொடுத்து அவருடைய ஆடுகளுக்கும் ஒரு கொட்டிலை நிர்மானித்துக் கொடுக்கலாம் என எண்ணுகிறேன். அவருடைய அபிப்பிரயாயத்தையும் சென்று கேட்கவேண்டும்.
நண்பர்களே! மனிதநேயமிக்க அந்த வைத்தியநிபுணரினால் வழங்கப்பட்ட இந்த அமானிதத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும், அதற்கான உங்களது ஆலோசனைகளையும், பிரார்த்தனைகளையும் வேண்டிநிற்கிறேன்.
நண்பர்கள், முடிந்தால் ஒரு சிறுதொகையை வழங்குவீர்களாக இருந்தால் அவர்கள் வாழும் அந்த வீட்டை நன்கு நிர்மானித்து இதில் பங்கேற்கும் நண்பர்கள் அனைவரும் அந்த இடத்திற்குச் சென்று அவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும், ஒளியையும், மகிழ்ச்சியையும் ஏற்றி வைக்கலாம்.

உள்ளுர் நண்பர்களே! உங்கள் வீடுகளில் உபயோகமற்று பழைய கட்டில் கிடந்தால் ஒன்றைத் தந்துவுங்கள். இந்த மனிதர் வெரும் தரையில் உறங்குகிறார். நிலத்தில் படுத்து எழும்புவது பெரும்பாடாக இருக்கிறது.
இந்த பண உதவியை வழங்கிய அருமை நண்பருக்காகவும், அவருடைய மனைவி மக்களுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...

தகவல் SLM. Hanifa  (உதவிகள் செய்ய விரும்புபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும் - 0712737522 அல்லது 0771382035)

நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: