Friday, July 12, 2019

Friday, July 5, 2019

இப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச

இப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச

எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளார்.

வஹாபிசத்தை பாதுகாத்து, முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டிய தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அடுத்த தேர்தலில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் வீரவங்ச கூறியுள்ளார். நுகோகொடையில் நடைபெற்ற வஹாபிச அடிப்படைவாதத்திற்கு எதிராக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அரசாங்கத்தில் சாதாரண முஸ்லிம் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்க மாட்டோம், அச்சம் காரணமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் போவதில்லை.

இந்த அச்சத்தை போக்கி, முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபாரத்தை முன்னேற்றவும் எங்களுக்கு முடியும், இதற்கு அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் எடுக்க வேண்டும். 

முஸ்லிம் அவ்வாறு செய்து எமது அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தால் அந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அடிக் கூட படவிட மாட்டோம், முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம், எனவே இது ஒரு தேசிய போராட்டம் வஹாபிச அடிப்படைவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் எனவும் விமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, July 4, 2019

சு.க. - மொட்டு இணைந்து ‘ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுண’

சு.க. - மொட்டு இணைந்து ‘ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுண’

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன பெரமுண  கட்சிகள் இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் ‘ஸ்ரீ லங்கா சுதந்திர பொது ஜன பெரமுண’ எனும் பெயரில் போட்டியிடும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 26ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
ஜப்பானுக்கு தப்பிச் செல்ல முயன்ற, சஹ்ரானின் சகா கைது

ஜப்பானுக்கு தப்பிச் செல்ல முயன்ற, சஹ்ரானின் சகா கைது

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரான் என்பவரின், சகாக்களில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஜப்பானுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் (சி.ரி.ஐ.டி.)கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  

மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த ஸைன் அன்சார் மொஹம்மட் ரினாஸ் எனபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும், நேற்று இந்த கைது இடம்பெற்றதாகவும், சந்தேக நபரை தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுத்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்  பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்

Thursday, June 27, 2019

சவுதியில் பிடிபட்ட மில்ஹான் காட்டிக்கொடுக்க, ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

சவுதியில் பிடிபட்ட மில்ஹான் காட்டிக்கொடுக்க, ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு,  ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள்  என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மில்ஹான் என்பவரிடம் சி.ஐ.டி. யினர் மேற்கொண்ட விசாரணையில்,  மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் ஸஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றைக் கடந்த மாதம் பொலிசார் கண்டுபிடித்தனர். 

இன்று வியாழக்கிழமை கொழும்பிலிருந்து மில்ஹானை அழைத்துசென்று  முகாம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே எஸ்லோன் குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த  300 ஜெலக்நைட்கள்,  ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவற்றை குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல மத்ரஸாக்களிலும், பாடசாலைக் கல்வி கட்டாயம் - வருகிறது புதிய சட்டம்

சகல மத்ரஸாக்களிலும், பாடசாலைக் கல்வி கட்டாயம் - வருகிறது புதிய சட்டம்

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களிலும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.  அரபுக் கல்லூரிகளில் தொழில் நுட்ப கல்வி அறிவையும் மற்றும் உயர்  பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொள்வதற்கான திட்டங்கள் புதிய ஒழுங்குவிதி முறைகளுடன் உள்வாங்கப்பட்டு;;ள்ளன.; தீpவரவாத்தை ஊக்குவிக்கக் கூடிய செயற்பாடுகள் கொண்ட எந்த அம்சங்களும் பாடவிதானத்தில் இடம்பெறாமல் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படவுள்ளன. அந்தவகையில் யார் என்ன சொன்னாலும் எதிர் வரும் காலங்களில் வெளியாகும் மௌவிமார்கள்  அறிவுத் துறையில் ஓர் உன்னதமான வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஒருங்கே கொண்டவர்களாக உருவாகப் போகின்றார்கள் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அரபுக் கல்லூரிகள் தொடர்பாகவும்  மற்றும் ஹஜ் விவகாரம் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் சட்ட மூலத்தை உருவாக்கி அமைச்சரவையின் அங்கீகாhரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதிய தீர்மானங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை, மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அமைச்சின்  அலுவலகத்தில் முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சது எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

அரபுக் கல்லுர்pகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து செற்படுவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் என்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த மே மாதம் இடம்பெற்றது. இதன் போது சகல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அரபுக் கல்லூரிகளை கல்வி  அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும் அதேவேளை இந்த வேலைத் திட்டத்தை முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுப்பதற்கு  எல்லா முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் ஏகமானதாக இணக்கம் தெரிவித்துள்ளார்கள். 

அரபுக் கல்லூரிகள்  கல்விக்  அமைச்சசுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான நிலைப்பாட்டுக்கு அப்பால் எமது மாணவர்களை மார்க்க ரீதியாக சரியான வழிநடத்தலுடைய நெறிப்படுத்துவதற்கான வழிவகைகளை  செய்து கொடுக்க வேண்டியது  எமது கட்டாயக் கடப்பாடாக மாறியிருக்கிறது.  இந்நாட்களில் இந்த விடயம் தொடர்பாக  எதிர்கொண்ட நிலைமைகளை ஓரளவு  விரைந்து உள்வாங்கிப் புரிந்து கொண்டு  சரியான வகையில் -  வழியில் அது நிரந்தரமானதாகவும் ஆக்கபூவர்மானதாகவும் எமது எதிர்கால  உலமாக்களின் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

அது மட்டுமல்ல .நாங்கள் இனி வரும் காலங்களில்  கருத்தொருமைப்பாட்டையும், பொதுப்போக்கையும் மிகவும் பலமாக பின்னபற்ற வேண்டியவர்களாகவுள்ளோம். எனவே இந்நாட்டினுடைய இன்றைய  சூழல் அனைத்து முஸ்லிம்களும் இணங்கி ஒற்றுமையுடன் பயணிக்கும் போக்குக்கு செயலூக்கம் கொடுத்து இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை ;அவர்கள்  உருவாக்கியுள்ளார்கள். இது நல்ல விசயமாகும். . நாங்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவாறே முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் இருப்பையும், எமது புனித மார்க்கத்தையும் நிலை நிறுத்த நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம் என்பதை எதிர்காலத்தில் வரலாறு கூறும்.

முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் அரபுக் கல்லூரி விடயம் தொடர்பில் பள்ளிவாசல்களுக்கான வக்பு சபை இருப்பது போன்று அதற்கான  தனியானதொரு சபை இருக்கும்  .கல்வி அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் இருப்பார்கள். மூன்று அல்லது நான்கு முஸ்லிம் அல்லாதவர்களும் ஏழு  அல்லது எட்டு முஸ்லிம் பிரதிநிதிகள். இடம்பெறுவர். 

எவ்வாறாயினும் பாட விதானம் தொடர்பாக தீர்மானங்கள் யாவும் மார்;க்க அறிஞர்களின் வழிகாட்டலின்படியே எடுக்கப்படும். இந்த சட்ட மூலத்தின் மூலம் எல்லா அரபு மத்ரஸாக்களிலும் கட்டாயமாக பாடசாலைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அதேவேளையில் விசேடமாக இந்த அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அதிக வாய்ப்புகள் ; கிட்டும்  எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் நீண்ட காலமாக தயாரித்து வந்த பொதுக் கல்விப் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். என். வி. கிவ், தொழில் நுட்பக் கல்வி, கைத்தொழில் பயிற்சி என தொழில் பயிற்சிக் கல்வி முறையும் போதிப்பதற்கான சலுகைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

விசேடமாக பொதுவான கல்விக் கொள்கை இருந்த போதிலும்  தப்லீக் மத்ரஸா, தவ்ஹீத் மத்ரஸா, சுன்னத்துல் ஜமாத் போன்ற அரபுக் கல்லூரிகளில் மேலதிமாக பாடங்களைப் போதிப்பதற்கு தடைகள் இல்லை. எனினும் இந்தப் பாடங்களைப் போதிப்பதற்கு கல்வி சபையின் அங்கீகாரத்தைப் பெற்றியிருக்க வேண்டும். எதிலும் தீவிராத  ஊக்குவிக்கக் கூடிய செயற்பாடுகள் கல்விப் போதனைகள் பாட விதானத்தில் அமைந்திருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான விடயமாகும். என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Monday, June 24, 2019

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியிடப்படும் - உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியிடப்படும் - உயர் கல்வி அமைச்சர்

2019ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் மாதம் வெளியிடப்படுமென, பதில் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளியை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி ஒரு வருடமாகியும் வெளியிடப்படவில்லை எனவும், இது அவர்களின் எதிர்காலம் தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்  சுட்டிக்காட்டினார். 
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (21)  பதில் உயர் கல்வி அமைச்சர்  மேலும் தெரிவித்தபோது, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளியை இந்த மாதம் வெளியிட ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் காரணமாக தாமதமாகியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளியை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மூவருக்கும் தீவிரவாதத்துடன் எவ்வித தொடர்புமில்லை: பொலிஸ் அறிக்கை

மூவருக்கும் தீவிரவாதத்துடன் எவ்வித தொடர்புமில்லை: பொலிஸ் அறிக்கை

WDEqAqvதீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதற்கான எவ்வித முறைப்பாடுகளும் இல்லையென சபாநாயகருக்கு அறிக்கை வழங்கியுள்ளது இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுனராகவிருந்த அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் அவர்களை பதவி நீக்க வேண்டும் எனவும் கோரி அத்துராலியே ரதன தேரர் உண்ணாவிரதமிருந்த அதேவேளை பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த மூவர் உட்பட அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியிருந்தனர்.

ஜுன் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரையான ஒரு வார காலம் முறைப்பாடுகளை வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு, டிஐஜி KD பிரியந்த தலைமையில் மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று இதற்கென நியமிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அவ்வாறு எவ்வித முறைப்பாடுகளும் இல்லாத நிலையில் ரிசாத் பதியுதீன் உட்பட மூவருக்கும் தீவிரவாதத்தோடு எவ்வித தொடர்புமில்லையென சபாநாயகருக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 'மறைமுக' சக்தி: ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 'மறைமுக' சக்தி: ஹக்கீம்

hRCAJU2ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனையும் விட ஆபத்தான மறைமுக சக்தியொன்று இருப்பதாகவே தாம் கருதுவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.

குறித்த சம்பவத்தின் பின்னணியில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் இவ்வாரம் மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐ.எஸ். தவிர்ந்த வேறு தொடர்புகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, மு.கா தலைவர் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து இத்தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கிக்கும் தெரியாமல் சவுதி 'பணம்': ஹிஸ்புல்லாஹ் மீது புதிய குற்றச்சாட்டு

மத்திய வங்கிக்கும் தெரியாமல் சவுதி 'பணம்': ஹிஸ்புல்லாஹ் மீது புதிய குற்றச்சாட்டு

PLUnFWTமட்டக்களப்பு கம்பஸ் எனும் பெயரில் முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் நிர்மாணித்து வரும் தனியார் கல்வி நிறுவனத்துக்கு சவுதி அரேபியாவிலிருந்து 3000 மில்லியன் ரூபா பணம் (வட்டியில்லாக் கடன்) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் அது எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லையெனவும் அது தொடர்பில் விசாரணை நடாத்தப் போவதாகவும் தெரிவிக்கிறது கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழு.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த நான்கு தனவந்தர்கள் ஊடாக இவ்வாறு நிதி பெறப்பட்டுள்ள போதிலும் அரச வங்கிகளான மத்திய வங்கிக்கோ அல்லது இலங்கை வங்கிக்கோ தெரியாமல் பெருந்தொகை பணம் எவ்வாறு நாட்டுக்குள் வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹிஸ்புல்லாஹ்வின் புதல்வர் தரும் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதாகவும் குறித்த கல்வி நிறுவனம் அமையப் பெற்றுள்ள இடத்தில் அவ்வாறானதொரு பல்கலைக்கழகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதும் சந்தேகமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

முறையான அரச அனுமதி பெற்றே இக்கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி மறவா இலங்கைத்தமிழன்.

நன்றி மறவா இலங்கைத்தமிழன்.

Image may contain: 1 person
நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டு யுத்தத்தின் உக்கிரத்தால் வறுமையில் வாழ்ந்த இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மத தமிழ் சகோதரர் ஜீவா ஸ்ரீ கடந்த 9 வருடமாக இஸ்லாமிய நாடான கட்டாரில் பணி புரிந்து வருகிறார்.உப்பிட்டவரை உள்ளளவு நினை எனும் முதுமொழிக்கிணங்க தனது வறுமை, கஷ்டங்கள் நீங்க தொழில் வழங்கிய கட்டார் நாட்டிற்கு நன்றி செலுத்தும் வகையில், தனது உடலின் கைப்பகுதியில் கட்டார் நாட்டின் அதிபர் ஷேக் அல்-தமீம் அவர்களின் உருவத்தையும் அரபு மொழியில் அவரின் பெயரையும் சேர்த்து பச்சை குத்தி தனது நன்றியுணர்வை வெளிக்காட்டியுள்ளமை மெய்சிலிர்க்க வைக்கிறது. .

இஸ்லாமிய நாடுகளிலிருந்து அபிவிருத்திக்கும் தமது குடும்ப வறுமையைப் போக்கவும் நிதியுதவிகளை பெற்று அனுபவித்து விட்டு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும் இஸ்லாமிர்களின் ஆடைகளையும் அரபு மொழியையும் தடை செய்யவும் துடியாய்த்துடிக்கும் சில கடும்போக்குவாத பௌத்த, இந்து இனவாதிகள் இந்த சகோதரிடமிருந்து பாடங்கற்றுக்கொள்ள வேண்டும்.

அதே நேரம், இதே நாட்டில் தொழில் புரிந்து கொண்டு, இந்நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தியும் துவேஷங்களையும் காக்கியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சகோதரர்களும் இந்த சகோதரனிடமிருந்து படிப்பினை பெற வேண்டும்.
கப்பம் வழங்க மறுத்த வர்த்தகர் கொலை: தெஹிவளையில் சம்பவம்

கப்பம் வழங்க மறுத்த வர்த்தகர் கொலை: தெஹிவளையில் சம்பவம்

தெஹிவளையில் உள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டபோது அதனை வழங்க மறுத்ததால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான அப்துல் அசீஸ் (60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அவர் தனியாகவே வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.