Friday, May 17, 2019

பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மீது தாக்குதல்..

SHARE
ஹட்டன் கல்வி வலயத்தின் மஸ்கெலியா கவரவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மீது நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை ஒன்றை மையப்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பில் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
 
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பளை - புப்புரஸ்ஸ - லெவலன் தோட்டத்தின் ஜீ.கே. பிரிவில் தோட்ட உதவி முகாமையாளரால் நேற்று தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர் பன்விலதென்ன பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தோட்டப்பிரிவில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: