Wednesday, May 15, 2019

வட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அவசர கோரிக்கை

SHARE
வட்சப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில், ஊடுறுவிகள் (hackers) கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அந்த நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களிடம் கோரியுள்ளது.


ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்சப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, 'திறன்பெற்ற ஊடுறுவிகள்' ( Skilled hackers) இதை மேற்கொண்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வட்சப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வட்சப் நிறுவனம் வெளியிட்டது.



எனவே வட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அந்த நிறுவனம் தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் கோரியுள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: