Monday, May 13, 2019

தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!

SHARE
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜமாதே மில்லாதே ஈப்ராஹிம் எனும் ஜே.எம்.ஐ மற்றும் விலயாத் அஸ் செய்லானி இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக பெயரிடப்பட்ட மற்றைய இரு அமைப்புக்களாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொழுத்துடன் இந்த அதி விசேட வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் அவசர ஒழுங்குவிதிகள் 75 - 1 பிரிவின்  கீழ் வௌியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , நாடாளுமன்றில் குறித்த அமைப்பினை தடை செய்யும் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் , அவசர நடவடிக்கையாக குறித்த அமைப்பை தடை செய்வதாக ஜனாதிபதி கடந்த தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 comments: