Sunday, December 23, 2018

30 வருட கால வடிகான் பிரச்சினைக்கு கௌர அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களினால் தீர்வு

SHARE
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி - 02 பீ.எஸ். குறுக்கு வீதிக்கு வடிகான் அமைக்கப்படாதமையினால் சுமார் 30 வருடங்களாக இப்பகுதி  குடியிருப்பாளர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதுடன் பல அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.


இந்நிலையினை கவனத்திற் கொண்டு எமது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) அவர்கள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க விவசாய, கால்நடைகள், நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ். எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில் பூரணமாக வடிகான் அமைப்பதற்கும் சேதமடைந்துள்ள இவ்வீதியை புனரமைப்பதற்குமான பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

கௌரவ தவிசாளர் அவர்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஓட்டமாவடி பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ. அக்பர் சகிதம் சென்று குறித்த வீதியினை பார்வையிட்டனர். தற்போது வடிகான் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றதன.
SHARE

Author: verified_user

0 comments: