Saturday, May 12, 2018

ரூ.8.64 இலட்சம் மின் கட்டணம் தற்கொலை செய்து கொண்ட காய்கறி வியாபாரி

SHARE
கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டுக்கு ரூ.8.64 இலட்சத்துக்கு மின் கட்டணம் வந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த காய்கறி வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் அருகே பாரத் நகரில் வசித்து வந்த ஜகன்னாத் ஷேல்கே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில் அதிகப்படியான மின்காரக் கட்டணம் வந்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரித்ததில், மின்சாரக் கட்டணத்தை அளவீடு செய்யும் ஊழியரின் அலட்சியத்தால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகவும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் மின்சார வாரியம் கூறியுள்ளது.

2 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் ஜகன்னாத் வசித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இவரது வீட்டுக்கு வந்த மின் கட்டணத்தில் இவர்கள் 55,519 யுனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அதற்காக ரூ.8 இலட்சத்து 64 ஆயிரத்து 781 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குரிய இயந்திரத்தில் 6,117.8 என்ற எண்ணுக்கு பதிலாக 61,178 என்று பதிவு செய்ததே இந்த குளறுபடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
SHARE

Author: verified_user

0 comments: