Thursday, May 17, 2018

10 மாவட்டங்களில் 15,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம்

SHARE
நாடுபூராகவுமுள்ள 10 மாவட்டங்கள் அடிக்கடி அனர்த்தம் ஏற்படும் ஆபத்தான பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.இங்கு ஆபத்தை எதிர்நோக்கும் 15 ஆயிரம் குடும்பங்கள் வசிப்பதோடு 3 வருட காலத்தில் இவர்கள் அனைவரையும் அகற்றி பாதுகாப்பான குடியிருப்புகள் வழங்க இருப்பதாக கட்டட ஆய்வு நிலைய பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் இது வரை 1600 வீடுகள் கேகாலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏனைய மாவட்டங்களிலும் பாதுகாப்பான வீடுகளை நிர்மாணிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்,

நீர் வடிந்தோடுவதற்காக வழிகள் தடைப்படுவதால் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது. மலையடிவாரங்களில் வாழும் மக்கள் மண்சரிவு ஏற்படக் கூடிய அடையாளங்கள் தொடர்பில் அவதாதனமாக இருக்க வேண்டும். ஏதும் பிரதேசத்தில் ஒரு நாளில் 75 மில்லி மீற்றர் மழை பெய்தால் தயாராக இருக்க ​வேண்டும். 100 மி.மீ மழை பெய்தால் வெளியேற தயாராக வேண்டும் 150 மில்லி மீற்றர் மழை பெய்தால் வெளியேற வேண்டும்.

பதுளை, மாத்தளை, இரத்னபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருணாகல், கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் அனர்த்த அபாயம் கூடுதலாக உள்ள மாவட்டங்களாக கட்டட ஆய்வு நிலையம் அடையாளம் கண்டுள்ளது. இங்கு வாழும் ஆபத்தை எதிர்நோக்கும் 15 ஆயிரம் குடும்பங்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்
SHARE

Author: verified_user

0 comments: