Saturday, April 21, 2018

ஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்

SHARE
பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்களை பொருத்துவது இன்று முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
அதேவேளை, பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான வயது 35 க்கு மேற்பட்டதாக இருக்கவேண்டுமென்ற தீர்மானத்தை வீதி பாதுகாப்பு தேசிய அதிகார சபை எடுத்துள்ளது.
இதற்கிணங்க 35 வயது என்ற வயதெல்லை இந்த வருட இறுதிக்கு முன்னர் நடைமுறைக்கு வரவுள்ளதாக மேற்படி சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீற்றர் பொருத்துவது கட்டாய நடைமுறைக்கு வந்துள்ளதால் இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை கைது செய்வதற்கும் அபராதம் விதிப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டு கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முச்சக்கர வண்டி சாரதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் சலுகை வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அந்த சலுகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
SHARE

Author: verified_user

0 comments: