Thursday, March 22, 2018

பேருவளை- அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன

நண்பர்களுடன் பகிர
இராஜாங்க அமைச்சரால் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேடைகளில் மக்கள் முன் வைக்கப்பட மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேருவளை- அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு இன்று (22.03.2018) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் திகதி இடப்பட்ட காசோலைகளே இன்று மக்களுக்கு வழங்கப்பட்டன.
பேருவளை- அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அதற்கான முன்னெடுப்புகளை நான் மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தேர்தல் காலங்களில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் சிலர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற எமது கூற்றை பொய் என்று மறுத்து வந்தனர். மேலும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொய் கூறுகிறார் என்று மக்கள் மத்தியில் பேசினர்.
அல்ஹம்துலில்லாஹ், இன்று எது பொய் எது உண்மை என்று மக்களுக்கு தெளிவாக தெரிகிறது.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின் சற்று தாமதமாக இன்று வழங்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் அவர்கள் தான் கூறியது போல அவரது பணியினை மிக கண்ணியமாக செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.





நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: