Saturday, March 3, 2018

அம்பாரை சம்பவம் மிகவும் கவலையளிக்கின்றது. ஜனாதிபதி மட்டக்களப்பில் வைத்து தெரிவிப்பு

SHARE
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மார்ச் அல்லது செப்டம்பர் மாதமாகின்ற போது இந்த நாட்டில் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சில நடவடிக்கையை கடும் போக்குவாதிகளும் தீவிரவாதிகளும் மேற்கொள்கின்றனர். இந்த நாட்டை சீரழிப்பதற்கு திட்டமிட்டு இவர்கள் செய்கின்றனர். இதில் மக்கள் கவனமாக பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று (3.3.2018) சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கான ஆசியர் நியமனங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு வெபர் விiளாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த பைவத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி நாங்கள் இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருகின்றோம்.
தேசிய சகவாழ்வு ஒற்றுமை நல்லிணக்கம் போன்றவற்றை சிலர் தவறாக இந்த நாட்டில் பேசுகின்றார்கள்.
அவர்கள் அவ்வாறு பேசுவது செயற்படுவது தேசிய அநீதியாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாரை பகுதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் மிகவும் கவலைக்குரியதாகும்.
விகாரையாக இருக்கட்டும் அல்லது பள்ளிவாயலாக கோவிலாக இருக்கலாம் அவ்வாறான மத வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குவது மிக மிக தவறாகும்.
இப்படியான தாக்குதல்களை மேற் கொள்பவர்கள் மீது நாங்கள் இன மத பேதமின்றி அவர்களுக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையீனம் ஏற்பட்டு விடும். எனவே நாம் எல்லோரும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நாம் எல்லோரும் எமது பொறுப்பை சரியாக தெரிந்து செயலாற்ற வேண்டும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். எனது பொறுப்பை நான் சரியாக நறைவேற்றுவேன்.
இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழவேண்டும் என்பதுதான் எனது கனவாகும்.
அதை செய்யா விட்டால் இந்த நாடே அழிந்து விடும். எல்லா துறைகளிலும் கடும் போக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்ச் மாதம் அல்லது செப்டம்பர் மாதமாகின்ற போது இந்த நாட்டில் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன..
அவைகள் திட்டமிட்டுத்தான் செய்யப்படுகின்றன. அவைகளை இந்த கடும் போக்காளர்கள் தீவிரவாதிகளின் செயற்பாடுகளாகும்.
மார்ச் மாதம் செப்டம்பர் மாதங்களில்தான் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் பேசப்படுகின்றன.
இப்படியாக சில தீவிரவாதிகள் கடும் போக்காளர்கள் திட்டமிட்டு இந்த மாதங்களில் இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.
அரசாங்கத்திற்கு கஸ்டத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கமாகும்.
இதனால் சர்வதேசத்தில் எங்களை ஏற்றுக் கொள்கின்ற தன்மை குறைந்து போகின்றது. இதனால் நாடுதான் சீரழியும்.
எனவே எங்களுக்கு இல்லாமல் போன சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகத்தான் நான் கடந்த மூன்று வருடகாலமாக செற்பட்டு வந்தேன்
எனவே எனக்கும் உங்களுக்கும் சொந்தமான இந்த நாட்டுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் நான் செயற்பட்டு வந்தேன்.
கடும் போக்காளர்களை தீவிரவாதிகளை இந்த நாட்டு மக்கள் சரியாக புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் புத்தி சாதுரியமாக பொறுமையாக செயற்பட வேண்டும்.
இந்த தாய் நாட்டின் மீது நாம் அனைவரும் அன்பு செலுத்த வேண்டும். இன மத வேறுபாடின்றி அனைவரும் இந்த நாட்டை பாதுகாக்க பாடுபட வேண்டும்.என்றார்.
SHARE

Author: verified_user

0 comments: