Monday, March 12, 2018

கண்டிக்காக கிழக்கில் 5 கோடி!

SHARE
கண்டியில் பாதிப்பிற்குள்ளான முஸ்லிம்களுக்காக கிழக்கு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மூலம் இதுவரை சுமார் 5 கோடிக்கு மேல் நிவாரண உதவிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்,காத்தான்குடி,அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் உட்பட பல பிரதேசங்களில் இந்த நிவாரண சேகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது கல்குடா தொகுதியில் (ஓட்டமாவடி, வாழைச்சேனை,மீராவோடை)30 இற்கு மேலாக பள்ளிவாயல், பல சமுக அமைப்புக்கள் இருந்தும் இவ்வாறான ஒரு விடயத்தை முன் நின்று நடத்துவதற்கு திரன் அற்று இருப்பதற்கான காரணம் என்ன?
அரசியல் விடயம் என்று வருகின்ற போது முன் நிற்கும் நாம், இவ்வாறான ஒரு சமுக விடயம் என்று வருகின்ற போது பின்னடைவில் நிற்கிறோம்.
கர்தால் என்று வருகின்ற போதும் எல்லா பிரதேசங்களிலும் நிறைவு பொற்ற பின்னரே எமது பிரதேசத்தில் நடை பெறுகின்ற நிலையை காணலாம்.
எமது பிரதேசத்தில் பல பள்ளிவாயல் அமைப்புக்கள் காணப்பட்டாலும், இவ்வாறான நிகழ்வினை முன் எடுப்பதற்கு எந்த நிருவாகமும் முன் நிற்பதாக இல்லை. ஏனைய பிரதேசங்களில் நிவாரண உதவிகள் சேகரிக்கபட்டு வளங்க படும் நிலையிலும் கூட, எமது பிரதேசத்தில் எது வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளாமல் இருப்பது வெற்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.






SHARE

Author: verified_user

0 comments: