Monday, February 26, 2018

பிரதம மந்திரி ரனிலுக்கு சில நாட்களுக்கே சட்டம் ஒழுங்கு அமைச்சு

SHARE
பிரதமர் சில நாட்களுக்கே பொறுப்பேற்பு
சட்டம், ஒழுங்கு அமைச்சை சுதந்திரக் கட்சி பொறுப்பேற்பது தொடர்பாக ஐ.தே.க தரப்புடன் ​பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தற்காலிகமாகவே பிரதமர் இந்த பதவியை ஏற்று ள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றத்தின் போது சகலரையும் திருப்திப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஐ.தே.க தான் பொறுப்பு கூற வேண் டும் என்றும் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளி யிட்ட அவர், சட்டம் ஒழுங்கு அமைச்சை பிரதமர் சில நாட்கள் பொறுப்பேற்றிருப்பார். விரைவில் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். சு.கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் பகிரப்பட்ட அமைச்சு பொறுப்புகளுக்கு அமைய இந்த அமைச்சு ஐ.தே.கவுக்கு வழங்கப்பட்டது.
சட்டம், ஒழுங்கு அமைச்சை இரு தரப்பும் கைமாற்றுவது குறித்த கவனம் செலுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பில் இரு தரப்பும் பேசி வருகிறோம்.
அமைச்சரவை மாற்றத்தில் சகலரையும் திருப்தி செய்ய முடியாது. கூடுதல் பொறுப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். குறைத்தால் கவலைப்படுவார்கள். ஞாயிற்றுக் கிழமை நடந்த அமைச்சரவை மாற்றம் ஐ.தே. கவின் தேவை படி நடந்தது.அதற்கு அவர்கள் தான் பொறுப்பு கூற வேண்டும்.இந்த மாற்றம் நகைப்புக்கிடமானதா இல்லையா என அவர்கள் தான் பதிலளிக்க வேண்டும். ஐ.தே.க அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யுமாறு அறிவிக்கப்பட்டதற்கமைய சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.அது தொடர்பில் ஒரளவு மகிழலாம் என்றார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகையில்,எமது தரப்பிற்குள்ள அமைச்சுக்களுடன் ஐ.தே.க தரப்பு அமைச்சு பொறுப்புகளை பரிமாற்றுவது தொடர்பில் ஆராயப்படுகிறது என்றார்.
சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் ஞாயிற்றுக் கிழமை வெளிநாடு சென்றிருந்தார்கள்.அதனால் இரு வாரங்களில் ச.க தரப்பு அமைச்சரவை மாற்றம் நிகழும்.ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சரவை மாற்றங்கள் தனித்தனியாக நடைபெறுவது தொடர்பில் யாரும் குழம்பத் தேவையில்லை என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
SHARE

Author: verified_user

0 comments: