Tuesday, February 20, 2018

இலங்கை – இந்தியா – பங்களாதேஷ் மோதல்!!! : போட்டி அட்டவணை வெளியானது!!!

SHARE
இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள முத்தரப்பு இருபதுக்கு-20 தொடரின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை கௌரவிக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை முத்தரப்பு இருபதுக்கு-20 தொடரை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் 6ம் திகதி ஆரம்பிக்கவுள்ள முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் மூன்று அணிகளும் தங்களது எதிரணியுடன் தலா இரண்டுமுறை மோதவுள்ளது. இதில் அதிக வெற்றிகளை பெற்று முன்னிலைப்பெறும் இரண்டு அணிகள் மார்ச் 18ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.
போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சுதந்திரக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் எதிர்வரும் மார்ச் 4ம் திகதி இலங்கை வந்தடையவுள்ளதென கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: