Wednesday, December 13, 2017

ஜெருசலத்தை பாலஸ்தீன தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க துருக்கி வலியுறுத்தல்!

SHARE
ஜெருசலத்தை பாலஸ்தீன தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிய எர்துவான், உரையாற்றிபோது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்திருக்கும் அமெரிக்காவின் முடிவு செல்லாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேல் ஒரு 'பயங்கரவாத நாடாக' இருப்பதாக எர்துவான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.
அமெரிக்கா படிப்படியாக அதன் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றப்போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஜெருசலேம் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலளிக்க வேண்டும் என்று எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: