Sunday, December 10, 2017

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உதயம்

SHARE













முஸ்­லிம்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­களை நிவர்த்தி செய்­வதை நோக்­காகக் கொண்டு முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் ஓர­ணியில் திரள வேண்டும் என்ற நீண்­ட­கால கோரிக்­கைக்கு அமை­வாக, முஸ்லிம் கூட்­ட­மைப்பு ஒன்று உத­ய­மா­கின்­றது.
இக்­கூட்­ட­மைப்பை அறி­விக்கும் உத்­தி­யோ­கப+ர்வ நிகழ்வு இன்று கொழும்பில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
அமைச்சர் றிசாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், எம்.ரி.ஹசன்­அலி மற்றும் பசீர் சேகு­தாவ+த் ஆகியோர் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் ஒன்­றி­ணைந்தே இப் புதிய கூட்­ட­மைப்பு இன்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
சிறு­பான்மைச் சமூ­க­மான தமி­ழர்­களின் நல­னுக்­காக, பல தமிழ்க் கட்­சிகள் பகை­ம­றந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக ஓர­ணியில் திரண்­டி­ருப்­பது போல முஸ்லிம் கட்­சி­களும் ஒரு கூட்­ட­மைப்­பாக உரு­வாக வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்­ட­கா­ல­மாக முஸ்லிம் சிவில் சமூ­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்­டது.
அதனை நிறு­வு­வ­தற்­காக முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட போதும் ஒரு­சில முஸ்லிம் கட்­சிகள் மட்­டுமே அதற்கு இணக்கம் தெரி­வித்­தன. அந்த அடிப்படையிலேயே முதற்கட்டமாக இரு கட்சிகளை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு நிறுவப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Source - Veerakesari 10.12.2017 

SHARE

Author: verified_user

0 comments: